பால்குடம், முளைப்பாரி திருவிழா 2023
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !!!
வழக்கம் போல இவ்வருடம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை, காரைக்குடியில் கருணையோடு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்குப் பால்குடம், முளைப்பாரி திருவிழா நடைபெற இருக்கிறது .
இவ்வருடம் 28.02.2023 செவ்வாய்க்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
- பால்குடத்திற்கு காப்புக் கட்டும் நிகழ்சசி 14.03.2023 செவ்வாய்க்கிழமையும்,
 - கரகம், மதுக்குடம், மற்றும் முளைப்பாரி நிகழ்வுகள் 21.03.2023 செவ்வாய்க்கிழமையும்,
 - பால்குடம் , காவடி மற்றும் பூக்குழித் திருவிழா 22.03.2023 புதன் கிழமையும்
 
நடைபெறவிருக்கின்றன!
ஓம் சர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே 
சரண்யே த்ரியம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே !!! 🙏 
ஆத்தாளின் திருவருளோடும், உங்கள் அனைவரின் நல்ல ஆதரவோடும் , நாமும் நல்ல முறையில், முதல் நாள் மாலை தொடங்கி மறு நாள் காலை மற்றும் மத்திய உணவு அன்னதானம் வழங்கி வருகிறோம்.
வழக்கம் போல உங்கள் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களால்   இயன்ற பொருளுதவியை  என்னுடைய UPI raghavan.shade@oksbi  என்ற முகவரிக்கு Google Pay (GPay) யில் அனுப்பலாம். PhonePe  எனில் என்னுடைய அலைபேசி எண்ணுக்கு 8095261616 அல்லது அதே  raghavan.shade@oksbi  என்ற UPI முகவரிக்கோ அனுப்பலாம்! நன்றி . 🙏 🙏
1997 ல் “நியூ பாய்ஸ் தண்ணீர்ப் பந்தல்” என்று ஆரம்பித்து ரூ 300 அளவில் இரண்டு நாட்கள் தண்ணீர்ப் பந்தல் அமைத்து பானக்கம் (பானகம்) , மற்றும் நீர் மோர் வழங்கி ஆரம்பித்த எங்கள் நண்பர்கள் குழு, இந்த இருபது வருடங்களில் இந்த அளவு வளர்ந்து வந்ததும், வருவதும் அன்னையின் திருவருளுக்கும், கருணைக்கும் அரும்பெரும் சாட்சி.
இன்னும் எங்கள் நண்பர்கள் குழுவினையும், இத்திருப்பணியில் உள்ளன்போடு இணைந்திருக்கும் அன்பர்கள் அத்துணை பேரையும் அவளின் திருப்பணிக்கு அர்ப்பணிக்கும் அளவுளக்கு நல்ல உடல், மன, பொருளாதார வளத்தையும் தொடர்ந்து வாரி வழங்கி அருள்புரிவாளாக என்று உளமார நம்புகிறோம்!!
☘️ ஓம் சக்தி !!! ☘️ 🙆🙇🙏
என்றும் இறைபணியில் ,
இராகவன் என்ற சரவணன் முத்து,
காரைக்குடி.
05.03.2023 ஞாயிறு.
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
05 Mar 2023 | Sun | 11:30:58 AM IST