A good motivational message via a story in Tamil to genuinely help others!
உதவியும் புண்ணியமும்
பயணி ஒருவர் ஆட்டோக்கார பெண் டிரைவரிடம் இடத்தை சொல்லி போக எவ்வளவு என்று கேட்டார்…அந்த பெண் டிரைவர் 300-ரூபாய் என்றார்
200-ரூபாய்க்கு வருமா ?
சற்று யோசித்த அந்த பெண் சரி 250-ரூபாய் கொடுங்க… ஆட்டோ பறந்தது…
அக்கா இந்த வழியா போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க…?
ரோட்டுக்கடைதான் சார்
அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்க, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம்
இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..
ஒரு நடுத்தரவயது அம்மா… அவரது நெற்றிமற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது
வாங்க ! இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார், ஆட்டோ டிரைவர் பெண்மணி
இட்லி, தோசை, புரோட்டா என கட்டினோம்…
எவ்ளோம்மா ?.
60-ரூபாய் சார்'ன்னு கடைக்காரம்மா சொன்னாங்க
100-ரூபாய் கொடுத்தேன்…
மீதியை சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா…
இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க…
சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்… அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி புறப்பட்டனர்…
சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க… நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?.
அக்கா இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்… இல்லையா ?.
எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அக்கா
நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது, அதன்மூலம் பொதுசேவை செய்வது, புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது, உண்டியல் போடுவது இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்
ஆட்டோ வீடு வந்து சேந்ததது…
இந்தாங்க அக்கா நீங்க கேட்ட 250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
200-ரூபாய் போதும்''
என்னாச்சு அக்கா? என்றேன்…
அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.
ஒரு கனம் மூச்சு நின்றது
நான் போட்ட புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகார பெண்ணின் புண்ணிய கணக்கு❤️❤️❤️
உதவியை உதவி என அறியாமலே செய்துவிட்டு கடந்து விடுங்கள்….
நம் உயிரின் பயணம் பலன் பெறும்!!!
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
19 Jun 2021 | Sat | 16 36 PM IST